மத்தியமுகாம் 11ஆம் கிராம கூழாவடி வீதி மக்களின் பாவனைக்கு கையளிப்பு..!

எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேசத்தில் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் PSDIP நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மத்தியமுகாம் 11ஆம் கிராம 18/5 கூழாவடி விவசாய வீதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அன்னமலை விவசாய போதனாசிரியர் பீ.குணநீதராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன், விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், அம்பாரை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் டி.எம்.எஸ்.பீ.திஸாநாயக்க, கல்முனை நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.நஸார், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் எஸ்.குணரெட்னம் சம்மாந்துறை வலய விவசாய உத்தியோகத்தர் எம்.பி.எம்.இர்சாத் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மாதிரிவீட்டுத் தோட்டத்திற்கான உபகரணங்களும், பயிர் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -