திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது...!

எப்.முபாரக்

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தொருவரை இன்று வியாழக்கிழமை(29) காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அபேரத்ன என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

பாலையூற்று பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரின் மனைவியுடன் தொலைபேசி மூலம் வைத்திருந்த தொடர்பு காரணமாகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைப்பு விடுத்த தொலைபேசி பட்டியலை சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -