கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நட்புரீதியான அபிவிருத்திக் கலந்துரையாடல்..!

 எம்.வை.அமீர் -

ல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 28.10.2015   புதன்கிழமை மாலை 8.00 மணியளவில் கல்முனை ஆசாத் வரவேற்ப்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலானது கல்முனைப் பிரதேசம் தற்காலத்தில் கல்விஅபிவிருத்தி,பொருளாதார அபிவிருத்திசுகாதார அபிவிருத்திஉட்கட்டமைப்பு வசதிகள்வாழ்வாதார வசதிகள், பிரதேச அபிவிருத்திமக்களின் ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தொழில் அபிவிருத்தி போன்ற முக்கிய அம்சங்களில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாகவும் அமைந்திருக்கும் தேசிய அரசாங்கத்தில் எமது கல்முனைப் பிரதேசத்தின் மேற்குறித்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு எமது பிரதேசம் அபிவிருத்தியில் முன்னணி வகிக்கவேண்டிய அவசியத்தை அமைச்சுப் பொறுப்பில் உள்ளவர்கட்கும் அரசியல் சக்தியுள்ளவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் எடுத்தியம்புவதற்காக   ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நட்புரீதியான கலந்துரையாடலுக்கு கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எஸ்.அப்துஸ் சமத் தலைமை வகிக்க  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். விசேட அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் அவர்களும் கலந்துகொண்டார்.

மேற்படி நட்புரீதியான அபிவிருத்திக் கலந்துரையாடலில் கல்முனைப் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்,பொலிஸ் அத்தியட்சகர்,பிராந்திய சுகாதார பணிப்பாளர்,பிரதேச வைத்தியர்கள்,கல்முனை வர்த்தக சங்க பிரதிநிதிகள்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர்கள் செயலாளர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,சிரேஸ்ட விரிவுரையாளர்கள், அரச மற்றும் தனியார் திணைக்கள உயர் அதிகாரிகள் மார்க்க அறிஞர்கள் பெருமளவான ஊடகவியலாளர்கள்துறைசார் நிபுணர்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு பிரதேசத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பலவிடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கு கொண்டிருந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ், தனது உரையின் போது எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கு தான் திட்டமிட்டுள்ள விடயங்களையும் கடந்தகாலங்களில் தனக்கு ஏற்பட்ட தடங்கல்களையும் விபரித்துக் கூறினார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -