றிஸ்வான் றவூப்-
துபாய் பழைய மாணவர் சங்க பாடசாலைகளுக்கிடையிலான உள்ளரங்கு கிரிகட் போட்டிகளில் மாவனல்லை சாஹிரா கல்லூரி சாம்பியன் ஆனது.
புனித பீட்டர்ஸ் கல்லூரியினால் வருடாந்தம் நடாத்தப்படும் துபாய் பழைய மாணவர் சங்க பாடசாலைகளுக்கிடையிலான உள்ளரங்கு கிரிகட் போட்டிகளில் மாவனல்லை சாஹிரா கல்லூரி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் மாவனல்லை சாஹிரா கல்லூரி மூன்று சுற்றுகளிலும் தோல்வியடையாத ஒரே அணியாகும். அத்தோடு முதல் சுற்றில் ரோயல் கல்லூரி மற்றும் D.S.சேனாநாயக்க கல்லூரி, அரை இருதியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி உடன் வெற்றி ஈட்டி, இறுதி போட்டியில் கொழும்பு சாஹிரா கல்லூரியுடன் மோதி அமோக வெற்றி ஈட்டியது.
இதற்கு முன்னைய வருடம் துபாய் லங்கா லயொன்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்ட்பாடு செய்யப்படும் பழைய மாணவர் சங்க பாடசாலைகளுக்கிடையிலான டென்னிஸ் கிரிக்கெட் போட்டியிலும் மாவனல்லை சாஹிரா கல்லூரி சாம்பியன் ஆனது என்பது குறிப்படத்தக்கது.
