ரூபவாஹினி நேத்ரா தொலைக்காட்சியில் 24ம் திகதி மாலை 3 மணி முதல்
“தியாகத் தென்றல்” ஹஜ்ஜுப் பெருநாள் விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். முஸ்லிம் சேவைப் பொறுப்பதிகாரி அல்ஹாஜ் எம்.கே.எம்.யூனூஸ்ஸின் வழிகாட்டலில் மபாஹிர் மௌலானா, அஸாரியா பேகம், முபாரக் மொஹிதீன், சீ.பீ.எம்.ஷியாம் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் பாடலுடன் கலாபூஷணம் கே.எம் சவாஹிர் இசையமைக்க நூர்ஜஹான் மர்ஸூக், மொஹீனா பேகம், மர்யம் நாமிஸ், ரஹ்மான் ஆகியோர் பாடும் பாடல்களும் ஒளிபரப்பாகும்.
பாடல்களை கலைவாதி கலீல், என்.நஜ்முல் ஹுசைன், ரபீயுஸ் மௌலானா, நூர்ஜஹான் மர்ஸூக் ஆகியோர் இயற்றியுள்ளனர். கவிஞர்கள் வெலிப்பன்ன அத்தாஸ், கவிநேசன் நவாஸ், கெகிராவ அஜ்மீர்கான் ஆகியோருடைய கவிதைப் பொழிவுகளும் கலைச்செல்வன் எம்.எம்.ரவூப் எழுதி மபாஹிர் மௌலானா இயக்கிய “இன்னுமொரு புனித யாத்திரை” நாடகமும் இடம்பெறும்.
அத்துடன் குர்ஆன் அச்சிடுதல், கஃபாவுக்கான புடைவை நெய்தல், போர்த்துதல், மக்கா மணிகூட்டுக் கோபுரம் போன்ற விவரணப் படங்களும், சிறுவர் நிகழ்ச்சி, மலாய் நிகழ்ச்சி போன்றவையும் ஒளிபரப்பாகும், இவ் விசேட நிகழ்ச்சியினை ஏ.எம்.தாஜ், ஷாக்கிர் முஹம்மத், முபாரக் மொஹிதீன் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
