அக்கரைப்பற்று,மருதமுனை கடற்கரைப் பிரதேசம் தூய்மைப் படுத்தல்!

சர்வதேச கரையோரம் தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிக்கும் பணிகள் இன்று (22) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் அவர்களினால் அக்கரைப்பற்று பதுர் நகர் பிரதேச கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்படடன.

அக்கரைப்பற்று பிரதேச செயலகமும், அக்கரைப்பற்று மாநகர சபையும் அக்கரைப்பற்று பிரதேச சபையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிக்கும் பணிகளுக்கு கரையோரம் பேணல் திணைக்களம், அம்பாரை மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ பிரிவு முதலியவற்றின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தும் இப் பணிகளுக்கு   அக்கரைப்பற்று பொலிக்கன் மற்றும் மீனவ சங்கம் முதலிய சமூகசேவை நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்குகிறது.

இதன்போது அக்கரைப்பற்று- 14 வடிகான் பிரதேச கடற்கரைப் பிரதேசத்திலிருந்து பதுர் நகர் பிரதேச கடற்கரைப் பிரதேசம் வரையான பிரதேசத்தில் தேங்கிக் கிடந்த குப்பை கூழங்கள், வெற்று பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடி போத்தல்கள் தென்னை மர அடிப்பாகங்கள்  முதலிய கழிவுகள் அகற்றப்பட்டதோடு நிலமும் மட்டப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.
 
கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிக்கும் பணிகளின் ஆரம்ப வைபவத்தில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹஸைன்தீன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.சரீப், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள், திவிநெகும உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிகன் நிறுவனம்,, றஹுமானியா மீனவர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பன கலந்து கொண்டனர்.  





சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி மருதமுனை கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிப்பு 

பி.எம்.எம்.ஏ.காதர்-

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தையொட்டி கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத்துவத் திணைக்களம்,மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அகியவற்றின் வழிகாட்டலில்'அழகிய கடற்கரை பிதேசத்தினை சுத்தமாக பேணுவோம்'என்ற தொனிப் பொருளில் நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தினை சுத்திகரிக்கும் செயற்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்வு நேற்று காலை (22-09-2015)மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி இந்த சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.இதில் விஷேட விருந்தினர் களாக அம்பாறை மாவட்டச் செயலாளர் துஷித்த பி.வனிகசிங்க மேலதிக மாவட்ட செயலாளர் அஷ்செய்க்எம்.ஐ.எம்.அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் 

கே.இராஜதுரை,திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலி,திவிநெகு முகாமையாளர்களான ஏ.சி.அன்வர்,திருமதி பரீரா சஹீட்,மருதமுனை,நற்பிட்டிமுனை சமூதாய அடிப்படை வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன்,இளைஞர் சேவை அதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன்; கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,திவிநெகும உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,அல்-ஹம்றா வித்தியாலயம்,பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் ஆகிவற்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கழகங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் உள்ளிட்ட பெரும் தொகையானோர்  கலந்து கொண்டனர்

இந்த கரையோர சுத்திகரிப்பின் போது பெரிய நீலாவணை வீசி வீதியில் இருந்து  மருதமுனை மற்றும் பாண்டிருப்பு எல்லை வீதிவரை சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை குப்பைகள் அகற்றப்பட்டு  சுத்திகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -