பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக அப்பகுதியில் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரம் நேற்று 29 செவ்வாய்க்கிழமை இரவு உடைந்துள்ளது.
மீனவர் தங்குமிடக் கட்டிடத்துடன் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரமே இவ்வாறு உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார்; 25 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ள கட்டிடத்தை பார்வையிட அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.



