இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னெடுப்புகளை மாற்றியமைக்கும் வகையிலான அமெரிக்க முன்னெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டாம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகம் இந்த கோரிக்கையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றம் தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் பேரவை சர்வதேச விசாரணையை முன்னெடுத்துள்ளது.
இதன் அறிக்கையும் விரைவில் வெளிவரவுள்ளது,
இந்த நிலையில், உள்நாட்டு விசாரணை ஒன்று தொடர்பில் அமெரிக்கா மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைக்க முயன்று வருகின்றது.
இது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நிலையில், இந்தியா அமெரிக்காவின் அந்த யோசனைக்கு ஆதரவளிக்க கூடாது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி, இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
