நாடாளுமன்றத்தில் மலைப்பாம்பு....!

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று காலை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,

அவர்களின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றில், எடுத்துச் செல்லப்பட்ட பாம்பு தியவன்ன ஓயாவுக்கு அந்த கரையில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

இந்த மலைப்பாம்பு சுமார் 4 அடி நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்த பூச்சாடிக்குள் மாபிலா பாம்பு ஒன்று காணப்பட்டமை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -