யு.எல்.எம். றியாஸ்-
சம்மாந்துறை தென்னம் பிள்ளை கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த அலியார் முகம்மது இப்ராஹீம் என்பவர் இன்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இன்று மாலை (11.09.2015) சுமார் 4.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளக் ஜே முதலாம் பிரிவில் வசித்திவரும் இவருக்கு வயது 57 ஆகும் 4 பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு கூலித்தொளிலாளியாவார் இவருக்கு இரு ஆண்பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளது.
இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கடும் காற்று வீசியதன் விளைவாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
