இதனை தொடர்ந்து அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகதத்தர் தொழிற் சங்கத்தினால் இம்மமோட்டார் சைக்கள் வழங்கப்பபடுவது தொடர்பாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒரு கட்டமாக கடந்த மாதம் 25ம் திகதி சங்கத்தினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது, இக்கடிதத்தை ஆராய்ந்து அவதானித்த ஜனாதிபதி அவர்கள் இம்மாவட்ட அபிவருத்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்களை துரிதமாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு வஜிர அபேவர்த்தன அவர்களுக்கு 09.09.2015ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக அவரின் பிரத்தியேக செயலாளரினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்ததின் பிரதி இச் சங்கத்தின் தலைவர் கே.முகம்மட் கபீர் அவர்களுக்கு 15.09.2015ம் திகதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் இது அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தகவல்
இஸ்மாயில் றனிஸ்
பொருளாளர்
அம்பாரை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்; தொழிற் சங்கம்
மேலும் இது அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தகவல்
இஸ்மாயில் றனிஸ்
பொருளாளர்
அம்பாரை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்; தொழிற் சங்கம்

