107 பேர் பலியானதுடன், மேலும் 230 பேர் காயமடைந்த மக்கா பள்ளிவாசல் விபத்திற்கு 'சவுதி பில்லாடன் குழு"வே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்மாண பணிக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த பழு தூக்கி உடைந்து வீழ்ந்ததன் காரணமாகவே கடந்த தினத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
எனினும், பள்ளிவாசலின் நிர்மாண பணிகளில் ஈடுபட்டது அல் கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடனின் உறவினருக்கு சொந்தமான நிறுவனம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அந்த நிறுவனம் ஒசாமா பின் லாடனின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான ஒசாமா பின் லாடனின் உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
