நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சியின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் உட்பட தமது அணிக்கு அனுமதி வழங்கியதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்களிப்பு சம்பந்தமாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அனுமதியை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித்த அபேகுணவர்தன உட்பட 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அனுமதி கிடைத்த 25 பேர்களின் பெயர் விபரங்கள்
டலஸ் அழகப்பெரும
மஹிந்தானந்த அளுத்கமகே
பவித்ரா வன்னியாராச்சி
ரோஹித அபேகுணவர்தன
ரஞ்சித் சொய்ஸா
மஹிந்த ராஜபக்ச
நாமல் ராஜபக்ச
சமல் ராஜபக்ச
சாலிந்த திஸாநாயக்க
ரமேஷ் பத்திரன
சானக டில்ஷான்
எஸ்.பீ.முத்துகுமாரன
பிரசன்ன ரணவீர
இந்திக்க அநுருத்த
சிசிர ஜயகொடி
ஸ்ரீயானி விஜேவிக்ரம
மனுஷ நாணயக்கார
ஷெஹான் சேமசிங்க
ஜொன்ஸ்டன் பிரனாந்து
பியல் நிஷாந்த சில்வா
மஹிந்த யாப்பா அபேவர்தன
ரோஷான் ரணசிங்க
எஸ்.எம்.சந்திரசேன
கனக ஹேரத்
பந்துல குணவர்தன
காஞ்சனா விஜேசேகர
காமினி லொக்குகே
விதுர விக்ரமரத்நாயக்க
சனத் நிஷாந்த
திலும் அமுனுகம
லோஹான் ரத்வத்தே
பிரசன்ன ரணதுங்க
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லாத முன்னணி உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் 22ஆம் திகதி எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர்.
ஜயந்த சமரவீர
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
உதய கம்மன்பில
வீரகுமார திஸாநாயக்க
பத்ம உதயஷாந்த
நிரோஷன் பிரேமரத்ன
