மஹிந்தவின் வீட்டில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் - நடந்தது என்ன..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தற்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பியமைத் தொடர்பில் சுமார் பத்துக்கோடி ரூபா வரை சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேன நான்குகோடி நாற்பத்தாறு லட்சம் ரூபாவுக்கு விளம்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டிருந்தபோதும், மஹிந்த தரப்பின் தலையீடு காரணமாக அந்த விளம்பரங்கள் உரிய முறையில் ஒளிபரப்பப்படாமல் இருந்தமையினால், ஒரு கோடி எண்பது லட்சம் ரூபா அளவில் சுயாதீன தொலைக்காட்சி திருப்பிச் செலுத்த நேர்ந்துள்ளது.

இதன் மூலமாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன தொலைக்காட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் மைத்திரிபால சிரிசேனவின் விளம்பர கட்டணங்களை விட பாதிக் கட்டணமே மஹிந்த ராஜபக்சவிடம் அறவிடப்பட்டுள்ளது.

இவை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மிரிஹானையில் உள்ள அவரது வீட்டிற்கு ஆணைக்குழுவினர் சென்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -