ஏ.எல்.றமீஸ்-
அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அக்கரைப்பற்று பதியுதீன் முஹம்மத் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
லீக்கின் தலைவரும் பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.நவாஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவரும் சர்வதேச நடுவருமான என்.ரீ.பாறுக் விஷேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அக்கரைப்பற்று லீக்கின் எதிர்கால செயற்திட்டங்கள் ,புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளல் கடந்த காலங்களில் பங்களிப்பு செய்யாத கழகங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
