முன்னாள் ஊடத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று முற்பகல் பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையானார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில், ஒளிப்பரப்பபட்ட பிரசார நடவடிக்கைகளுக்காக நிதி வழங்காது, 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல அழைக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, இந்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று மதியம் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பீ ஜயசுந்தர இந்த ஆணைக்குழு முன் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடதக்கது.
