உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை

ரமொன்று விதைத்து

ஒற்றுமை என்னும் உரமிட்டு

ஆல விரூட்சமாய் வேரூண்றிட

வகைசெய்த தலைவன் நீ.....


அன்றய இத்தினத்தில்

காற்றலைச் செய்தியாக

வானூர்தி விபத்தில் - உம்

மரணமென்றார்கள்....


வீதிகளெங்கும் மரண ஓலம்

மக்களுக்காய் உழைத்தவனின்

மரணத்தைக் கூட மறுத்தது மனங்கள்

விழித்திருந்து விடை கொடுத்தார்கள்


15 வருடங்கள் கடந்துதான் விட்டது

பாதகத்தின் சூத்திரமின்னுந் தொலங்கவில்லை

நீ வளர்த்த தலைமைகளின்னும்

வினவியதாகவும் தெரியவில்லை....


உம் மறைவில் ஒன்றுமட்டும்

நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி

தலைமைகளும் பலராகி

ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்

ஒப்பாரி வைக்கிறார்கள்


நீ காட்டிய வழியில்

இன்றொரு தலைவன் பயணிக்கிறான்

ஆனாலும் அன்றய நிலை இன்றில்லை

எதிர்காலமதை வென்றிடுமா தெரியவில்லை


நானன்றுப் பாலகன்

என் மண்ணில் உன் மேடையில்

உனைவாழ்த்திப் பேசியது கேட்டு

எனையழைத்து உச்சி மோர்ந்தாய்

மெய்சிலிர்க்கிறது இன்றும்....

உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது


நீ ஓங்கிய விரல் கண்டு

வீங்கியது ஆட்சியர்களின் உள்ளம்

நீ வகுத்த வியூகங்களால்

வியர்த்தார்கள் பயந்து

வீழ்த்தி விட்டார்கள் கோழைகளாய்


சுவனமது உனக்காகியது - உம்

சுவடுகள் மட்டும் அசைபோடப்படுகிறது

உனைத் தலைவனாய் ஏற்றவனென்றும்

விலைபோகாத போராளியாய்

உன்வழியில் மரணித்திடுவான்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -