ஹெல்மட் பாஸ்போர்ட் குறித்து விசேட விசாரணை..!

டுத்தவர்களின் பாஸ்போர்ட்டில் ஹெல்மட் முறையில் தலையை மட்டும் மாற்றி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வோர் குறித்து விசேட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இன்னொருவருக்குச் சொந்தமான பாஸ்போர்ட்டுகளில் தலையை மாற்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் புகலிடம் தேடிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த விடயத்தில் வெளிநாட்டவர்களுடன் இலங்கையைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயலாற்றுவதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் பணியகத்தின் ஒரு சில அதிகாரிகளும் தொடர்புபட்டிருப்பதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் கூட துபாய்க்கு இவ்வாறான போலி பாஸ்போர்ட்டில் பயணிக்க முயன்ற நான்கு பெண்கள் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து போலி பாஸ்போர்ட் பயணங்கள் குறித்து விசேட விசாரணையொன்றுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அண்மைக்காலமாக வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோருவோரும் போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி இலங்கையை விட்டு வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -