இன்று பல இடங்களில் திடலில் தொழப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் -படங்கள்

அட்டாளைஅச்சேனையில்:

அபு அலா -

ட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தஹ்வாவின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை (24) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


இன்று காலை 6.30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழகையும், கொத்பா பிரசங்கங்கமும் இடம்பெற்றது. இதனை அல்ஹாபிழ் என்.எம்.அப்துல் அஹட் மௌலவி நடாத்தி வைத்தார்.


இதில் பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.




<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சம்மாந்துறையில்.....

யு.எல்.எம். றியாஸ்-

ம்பாறை  மாவட்டத்திலும்  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திடல்களிலும்,
பள்ளிவாசல்களிலும் இடம்பெற்றது.
இதேவேளை சம்மாந்துறையிலும் திடல்களிலும், பள்ளிவாசல்களிலும் ஹஜ்ஜுப்
பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஏற்பாடு
செய்யப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கல்லூரியின் திடலில் இடம்பெற்றது.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அல் - ஹாஜ் மௌலவி கே.எல்.ஆதம்பாவா (மதனி)
அவர்களினால் நடாத்தப்பட்டது.
இதன்போது பெருமளவிலான ஆண்களும், பெண்களும் திடலில் பெருநாள் தொழுகையை
நிறைவேற்ற வருகை தந்திருந்தனர்.




<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜூப் பெருநாள்  தொழுகை

பி.எம்.எம்.ஏ.காதர்-



மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று காலை 6.15 மணிக்கு (24-09-2015)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இதில் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி பெருநாள் தொழுகை நடாத்தி ஜூம்ஆ பிரசங்கமும் செய்தார்.இந்த பெருநாள் தொழுகையில் பெருந்தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.




<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சாய்ந்தமருது கடற்கரை திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

எம்.வை.அமீர் -

லக முஸ்லிம்களின் பெருநாட்களில் ஒன்றான தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது கடற்கரை திடலில் மௌலவிஏ.கலீலுல் ரஹுமான் சலபி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாஹ் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பெருநாள் தொழுகையில் பெரும் எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -