மஹிந்தையின் காயத்திற்கு நாம் சிசிச்சை அளிக்கின்றோம் -ராஜித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய காயத்திற்கு தற்போதைய அரசாங்கம் சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, இலங்கை குறித்த ஐ.நா அறிக்கையை நிராகரிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினரால் ஏற்படுத்தப்பட்ட காயங்களுக்கு தகுந்த சிகிச்சைகளை வழங்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் தன்னால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மக்களின் குறைகளை கேட்கும் ஒன்று மட்டுமே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தையும் நான் நிராகரிக்கின்றேன்.

மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்திற்கு மாறாக உள்ளகப் பொறிமுறையில் விசாரணை செய்வதற்காக பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுள்ளோம். என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -