இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் வெற்றி அவுஸ்ரேலியா வசமானது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இரண்டு அணிகளும் இரண்டுக்கு இரண்டு என்று சமநிலை வகித்த நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5வது போட்டி நேற்று இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, அந்த அணி 33 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.
இதன்படி, இந்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றதுடன், தொடரையும், மூன்றுக்கு இரண்டு என்ற வகையில் கைப்பற்றியது.
