அரசியலமைப்புச் சபைக்கான ஜனாதிபதி, பிரதமரின் பிரதிநிதிகள் நியமிப்பு..!

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அரசியலமைப்பு குழுவிற்கான தங்களது பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் புதிய நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புச் சபைக்கான தமது பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.

இதன்படி அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் விஜேதாச ராஜபக்ஸ ஆகியோர் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சபையானது ஏழு நாடாளுமன்ற உறுப்பி்னர்களையும், மூன்று சுயாதீனமான உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -