மத்தள விமான நிலையம் நெற்களஞ்சியமாக்கப்பட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா- மஹிந்த

த்தள விமான நிலையம் நெற்களஞ்சியமாக்கப்பட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக மீன்பிடி நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டைக்கான அதிவேகப் பாதை போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதற்காக இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படக் கூடாது. நாட்டின் எதிர்கால நலன் கருதி இவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதே எனது நோக்கமாகும்.

அதற்குப் பதிலாக ஹம்பாந்தோட்டை பிரதேசம் தொடர்பான அபிவிருத்திகள் கைவிடப்பட்டு, மத்தள விமான நிலையம் நெற்களஞ்சியமாக்கப்பட்டால் எனது அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்யவும் தயங்க மாட்டேன் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -