ஆறு தேடிய புகழ்..!

ஆறு தேடிய புகழ்...

கோணவத்தை ஆறே! 
களனி எங்கும் நீ முத்தமிட்டு
கையோடை எங்கும் நழுவி
வறண்ட நிலமெங்கும் கழுவி
வனமுகங்கள் எங்கும் தடவி வந்த
ஆறே!


ஆற்று வாழை விரிப்பிட்டு
அல்லிகொடியால் மாலையிட்டு
ஆம்பல் மலரெங்கும் தூவி
பறவைகளால் அலங்கரித்து
மீன்களால் வரவேற்கும்
ஆறே! 


பளிங்கி நீரிலே!
உலா வரும் வெண்மீனு

உயர எழுந்திடும் கைமீனு
தின்ன தவிக்கும் மீன்கொத்தி
கண்டு கதறும் காக்கை.
கொக்கு மனம் பொங்கியெழும்
ஆறே!


இரு மருங்கு தென்னை
இரு அரனும் பெருமூரு
வற்றாத உன்னீரு
ஓலமிடும் உன் காற்று
ஓயாது புகழ் தேடும்
ஆறே!


அயராத பனித்தென்றலும்
ஆதி மர நிழலும்
ஓயாது வரும் மக்கள்
பெரும் திரளாய் ஓய்வெடுக்கும்
ஆறே!


கூறு போட்டு ஊரை குறுக்கறுத்தோடி

மதகு போட்டு மனங்களை தொட்டு
கடலோடு கலைந்தோடும்
கோணாவத்தை காட்சி
மனங்களிலே என்றும் கலங்காது
ஆறே!


அக்கரை ஊர் கவிஞன்
ஏ.எச்.ஜுனைடீன்
அட்டாளைச்சேனை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -