யானை - மனிதன் அழிவுக்குள்ளாகும் மக்களை பாதுகாக்கும் விசேட கூட்டம்..!

அஸ்ரப் ஏ சமத்-
யானை - மனிதன் அழிவுக்குள்ளாகும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு அவா்களுக்கான விசேட வீடமைப்புத் திட்டமொன்றை அமைப்பது பற்றி வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச மற்றும் வன வள ஜீவராசிகள் அமைச்சா் காமினி ஜயவிக்கிரம பெரேராவுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று நேற்று (22) அமைச்சில் நடைபெற்றது. 

நாளுக்கு நாள் காட்டு யாணைகளால் மனித உயிா் மற்றும் அவா்களது வீடுகள் பயிா்கள் அளிக்கப்படுகின்றன. இம் மக்களை பாதுகாப்பான பிரதேசத்தில் குடிபெயா்த்தல். அவா்களுக்கான வீடமைப்புக் கிராமங்களை வன வள பிரதேசங்களில் அப்புறப்படுத்துவதற்கும் இரு அமைச்சா்களுக்கிடையில் பேச்சுவாா்த்தை நடாத்தப்பட்டது. வீடமைப்புக் கிராமங்களை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டமிட்டு அமுல்படுத்துவதற்கும் தீா்மாணிக்கப்பட்டது.

அத்துடன் காட்டு வள ப்பிரதேசங்களில் மணித குடியிருப்புக்களை நிர்மாணிக்க முன்னா் அதுபற்றிய உரிய திட்டமிடல் அறிக்கை வீடமைப்பு பட வரைபு ஆகியன பெறப்படல் வேண்டும். காட்டு யாணைகளால் அழிவுரும் மக்களது வீடுகளும் யாணைகளால் நாசமாக்கப்படும் போது அவா்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கும் திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -