அமைச்சர் ரிஷாட் குழு அட்டாளைச்சேனைக்கு விஜயம்..!

றியாஸ் ஆதம்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாகவும், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி கௌரவ அதிதியாகவும், விசேட அதிதிகளாக புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர் இஷ்ஹாக் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -