தேசிய பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தவறில்லை - துமிந்த திசாநாயக்க

பொது தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு தேசிய பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தவறில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று அஸ்கிரி மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைய, தேர்தலில் போட்டியிட்ட அல்லது தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்க முடியும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தேவையான சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவதற்காகவே சட்டமுறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது எங்களது கட்சி மாத்திரமல்ல ஜே.வீ.பியும் இது போன்ற செயலை மேற்கொண்டுள்ளது.

எனினும் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. களவு, மோசடி, ஊழல் என்பவற்றை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை 

பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை நிர்வகிப்பது தொடர்பில் மகாநாயக்கர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -