மக்காவில் சீரற்ற கால நிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான நிலவரங்களை உடன் பெற்றுத் தருமாறு இலங்கை சவூதி அரேபியாத் தூவராலயத்திலுள்ள உதவித் தூதுவர் அன்சார் அவர்களிடம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தொலைபேசியில் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் போது இருவருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலில்
இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான விபரங்களை உடன் பெற்றுத் தருவதற்கு தான் தயராக இருப்பதாகவும் அதற்காக முழு நேர முயற்சிகளுடன் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த அவர் ஹரமில் மூன்று அடி தண்ணீர் நிற்பதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரையும் எந்தவிதமான பாதிப்பும் இடம்பெறவில்லை தமக்குத் தெரிவித்ததாகவும் இது தொடர்பான செய்திகளை உடனுடக்குடன் தகவல்களைப் பெற்று வெளியிடுவதற்கு முஸ்லிம் சமயம் கலாசாரம்
வெளியிடுவதற்கு தயராக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.
