அசாத் சாலி விவகாரம்: சகல ஆதாரங்களையும் வெளியிட வேண்டிவரும் - அசாத் சாலியின் முன்னாள் அமைப்பாளர்

அஸ்ரப் ஏ சமத்-

லங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியை அரசியலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என அவரின் கண்டி மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் பாததும்பரை ஹரிஸ்பத்துவ முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளருமான அல் ஹாஜ் ஹனீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...

கண்டி மாவட்டத்தில் ஆசாத் சாலி கடந்த மாகாண சபைக்கு போட்டியிட்ட போது நாம் அவருடன் இணைந்துகொண்டோம் அன்று நாம் அவருடன் இனைந்துகொள்ள ஒரே காரணம் அவர் முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்து என்பது மட்டும் தான் அன்று அவர் நல்லவரா கெட்டவரா என்பது பற்றி நாம் சிந்திக்கவில்லை சமூகத்துக்காக எமது முழு பலத்தையும் பிரயோகித்து அவரின் வெற்றிக்காக நாம் பாடுபட்டோம்.

கடந்த காலங்களில் அவரின் போலி முகத்தை நாம் கண்டுகொண்டோம் அன்று தொடக்கம் நா ம் அவரை விட்டு விலக ஆரம்பித்தோம். எனது மாவட்ட அமைப்பாளர் பதவியையும் நான் ராஜினாமா செய்தேன்.

மார்க்கம் அங்கீகரிக்காத அவரின் நடவடிக்கைகள் தொடர்ப்பில் நாம் அறிந்திருந்தும் அவரின் சில நடவைக்கைகள் தொடர்ப்பில் ஆதாரங்கள் இருந்தும் ஒருவரின் குறைகளை மறைப்பவரின் குறைகளை இறைவன் மறைப்பான் என்ற போதனைக்கு அமைய அவர் தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் இருந்தும் அவற்றை நாம் வெளியிடாமல் மறைந்து வந்தோம் ஆனால் இன்று அவரால் ஒரு குடும்பத்தின் மானம் நாடு வீதிக்கு வநதுள்ளது. இன்று வெட்கத்தை விட்டு பாதிக்கப்பட்ட குடும்பம் உலகத்துக்கு உண்மைகளை சொல்லியுள்ளனர்.

இதற்க்கு மேலும் நாங்கள் பொறுமை காப்பது அசாத் சாலி ஒரு நல்ல மனிதர் என நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு செய்யும் மிகம்பெரிய தூரோகம் என கருதவேண்டியுள்ளது.இதுபோன்ற சுய நல அரசியல்வாதிகள் சமூகத்துக்கு தோலுரித்து காட்டப்பட வேண்டியர்வகள்.அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படவேண்டியவர்கள். 

குறித்த பெண்மணியை தான் தடுத்து வைக்கவில்லை அவரின் சொந்த விருப்பத்தில் குறித்த பெண் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் தன் வீட்டில் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதாக தன்னை காட்டிக்கொள்ளும் இவர் மற்றான் மனைவியை விவாகரத்து பெறாத ஒரு பெண்ணை அவரது பெற்றோர்களின் அனுமதி இன்றி தன் மனைவி மகளுக்கு தெரியாமல் எவ்வாறு தன்னோடு தங்க வைக்க முடியும்.அப்படியே அவருக்கு மறுமணம் தேவை என்றால் மனைவியின் அனுமதியுடம் மறுமணம் முடித்திருக்கலாம் .

எமது அரசியல் தலைவர்கள் ,உலமாக்கள்,அமைப்புகள் ஆசாத் சாலிக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் வேண்டும் அவரை புறகணிக்கவும் அரசியலில் இருந்து ஓரம் கட்டவும் முன்வரவேண்டும்.இது எமது சமூக கடமை. 

இன்றும் சிலர் இந்த சன்பவங்கள் சோடிக்கப்பட்டவை அரசியல் பழிவாங்கல் என கருதுகின்றனர். பேஸ்புக்கில் கொமண்டுகளை பதிவிடுகின்றனர் ஒரு மாகாண சபை உறுப்பினர் அல்ல எந்த ஒரு தனிநபரும் தன் மனைவி இன்னொருவருடன் சென்றுவிட்டதாக கூறமாட்டார்.

எதிர்வரும் காலங்களில் அசாத் சாலியோ அல்லது அவரது சகாக்களோ இது ஒரு அரசியல் நாடகம் என கூறி இந்த சம்பவத்தை மலுங்கடிக்க முனைந்தால் ஆசாத் சாலிக்கும் அந்த பெண்மணிக்கும் இருந்த தொடர்ப்பு என்ன என்பதை உலகுக்கு தோலுரித்து காட்டும் என் வசம் உள்ள சகல ஆதரங்களையும் வெளியிட வேண்டிவரும் என ஆசாத் சாலிக்கும் அவரது சகாக்களுக்கும் நான் கூறிக்கொள்ள விருப்புகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர் முஸ்லிம் தலைவர் என நம்பி வாக்களித்த கண்டி முஸ்லிம்களிடம் ஆசாத் சாலி மன்னிப்பு கோரவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -