அமைச்சா் சஜித் பிரமேதாச நாளை காலை 05 மணிக்கு கடமைகளை பொறுப்பேட்கின்றாா்...!

அஸ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டின் எந்த வொரு அமைச்சரும் கடமைகளை பொறுப்பேட்காதவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரமேதாச நாளை (திங்கட்கிழமை) விடியற் காலை 05 மணிக்கு செத்சிரிபாயவில் உள்ள அமைச்சில் கடமைகளை பொறுப்பேட்கின்றாா்.

இதுவரை காலமும் அரச பஸ்சில் இலவசமாக காலை 8 மணிக்கு வந்து பி.பகல் 4. 30 க்கு வீடு போவா்கள் திங்கட் கிழமை மட்டும் செத்சிரிபாயவுக்கு அதி நிசியில் 4 மணிக்காவது செத்சிரிபாயவை வந்தடையவேண்டும்.

இதனால் அமைச்சின் அதிகாரிகள், கெயா டேக்கா், லிப்ட் ஒப்ரேட்டா், மிண்னியலாளா், செத்தசிரிபாய பாதுகாப்பு உத்தியோகத்தா்கள் செயலாளா்கள் அமைச்சின் கே.கே.எஸ் எல்லோரும் அமைச்சா் கூப்பிட்ட நேரத்தக்கு அமைச்சுக்கு வரவேண்டியுள்ளதாக குறைபட்டுக் கொண்டனா்.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவும் குணசிங்க புரவில் உள்ள அவரது சுச்சரித்தவில் பொதும்க்களைச் சந்திப்பது நடு நிசி 3.30ல் இருந்து 6.00 மணிவரை யாகும். சகல சுபுவேலைகளும் அதிகாலையிளேயே அவா் ஆரம்பித்து வைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிச்சுவட்டையே அமைச்சா் சஜித் பிரேமதாசவும் தொடருகின்றாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -