எம்.ரீ.எம்.பாாிஸ்-
கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வரும் அம்பாரை மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன், கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.எஸ். அமீர் அலி, திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. மஹ்ரூப், அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றஹ்மான், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
வெகுவிரைவில் தீர்வு கிடைக்க பெற தம்மால் முடியுமான முழு முயற்சிகளையும் அமைச்சா் றிஸாத் பதியுதீன் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். கிழக்கில் மீண்டும் மயிலின் ஆட்டம் தொடரும் எனவும், மக்களின் சேவையை எமது நோக்காக கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படுகின்றது என கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சா் அமீா் அலி தெரிவித்தார்.



