துபாய் மற்றும் அமீரகத்தில் Skype பயன்படுத்த தடை!

ஜக்கிய அரபு அமீரகத்தில் வழங்குவதில் விருப்பமுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், எடிசாலாட் மற்றும் டியு நிறுவனங்களை அணுகவேண்டும்.

ஜக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அதிகாரம், வாயிஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரொடொகால் ஸ்கைப்-யும் சேர்த்து – ஜக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளனர், என்று இமராத் அல் யோம் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

ஒழுங்குமுறை அதிகாரம் பெடெரல் டிகிரி சட்டம் எண். 3/2003 யின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், எடிசாலாட் மற்றும் டியு என்னும் இரண்டு தொலைதொடர்பு இயக்கங்கள் மட்டுமே இத்தகைய சேவைகளை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. எனினும், இந்த இரண்டு நிறுவனங்களும் இதுவரை UAE யில் VoIP சேவைகள் வழங்குதல் குறித்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவில்லை.

இங்குள்ள வசிப்பாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு விருப்பமுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், இந்த இரண்டு தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், என்று TRA கூறியுள்ளது.

சில ஸ்கைப் பயனர்கள் அண்மையில் சில கடினங்களை சந்தித்து வருகின்றனர் வசிப்பாளர்கள், ஸ்கைப் இயங்கவில்லை என்றும் பல மாதங்களாக அவர்களால் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்ய முடியவில்லை என்றும் இமராத் அல் யோம் நம்மிடம் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் இதர மென்பொருட்களான வைபரிலும் குரல் தெளிவுத்தன்மை பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

இமராத் அல் யோம் அறிக்கையில், எடிசாலட் மற்றும் டியோ இவ்விரு நிறுவனங்களிடம், மென்பொருட்களை தடை செய்வதற்கு முன் சர்வதேச அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று சந்தாதாரர்கள் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -