முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
நிந்தவூர்-3 வைத்தியசாலை வீதி மூன்றாம் குறுக்குச் சந்தியில் வளர்ந்து வரும் மினி சந்தையை இன்று 21-08-2015 மு.ப 11மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை அதிகாரிகள் திடீரென வந்து அகற்றக்கோரி உத்தரவு பிறப்பித்தார்கள்.
மேலும் அங்கு விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரிகள் ஏன் எதற்கென அதிகாரிகளிடம் கேட்டபோது அதிகாரிகள் கூறுகையில் தமக்கு நிந்தவூர் பொதுச் சந்தை வியாபாரிகளிடாமிருந்து கடிதங்கள் பல கிடைக்கப்பெற்றது அக்கடிதத்தின் பிரகாரம் நிந்தவூர் 3ம் குறுக்குச் சந்தியில் தற்போது மினி சந்தையொன்று ஒருவாகியுள்ளதால் நிந்தவூர் பொதுச் சந்தைக்கு மக்கள் வருவேதேயில்லை இதனால் எமது வியாபாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதென குறிபிட்டுள்ளதன் பிரகாரம் இவ்மினி சந்தையை அகற்றக்கோரியுள்ளோமென வருகைதந்த அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் இந்த வீதியோர மினி சந்தையை எதிர்வரும் திங்கள் கிழமைக்குள் அகற்றாவிட்டால் சட்டரீதியானமுறையில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அகற்றப்படுமென நிந்தவூர் பிரதேசபை அதிகாரிகள் கூறினார்கள்.