வடக்கில் TNA உடன் இணைந்த PMGG கிழக்கில் SLMC யில் போட்டி -மேற்கில் பொதுபல சேனாவுடன் தயாரா..

அவதானி-

ல்லாட்சி, சூரா சபை, உலமாக்கள் ஆலோசனை, விட்டுக்கொடுப்பு என்றெல்லாம் இல்லாத பொல்லாத கதைகள் கூறி ஆரம்பித்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று பதவிகளைக் கண்டதும் பெயரையும் மாற்றி, கொள்கைகளையும் மாற்றி திசைமாறிச் செல்வதனை நினைக்கும் போது இதுதான் மற்றவர்கள் கூறும் அரசியல் என்று எண்ணத்தோன்றுகிறது.

பதவிகளுக்காக பொதுபல சேனாவுடனும் கூட்டுச்சேர தயாரகவிருக்கும் NFGG என்னும் கட்சியினர் இன்னும் மக்கள் முன் வெட்கமின்றி எந்த முகத்துடன் வாக்குப்பிச்சை கேட்பது என்றும் கேட்க விரும்புகிறேன்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கொண்டவர்கள், இன்று கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துள்ளனர்.

எனவே அடுத்த நடவடிக்கையாக கொழும்பு போன்ற பகுதிகளில் பொதுபல சேனாவுடனும் இணைந்து ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் நப்பாசையில் களமிறங்குவார்களே தவிர மக்கள் சிந்தனை, கொள்கை என்ற பேச்சுக்கே இவர்களிடம் இடமிருக்க வாய்ப்பிருக்காது.

பொய்யான கூற்றுக்களை மக்கள் முன்வைத்து பெரும் சவால்களைப் பேசி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒவ்வொரு மேடையிலும் வசைபாடிய இவர்கள் இன்று முழங்காலிட்டு போய் மண்டியிட்டு முக்காடு போட்டு இணைந்திருப்பது எந்தவகையில் நியாயம்.

இவர்கள் இணைந்தாலும் இணையாவிட்டாலும் கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே அதிகமான ஆதரவுனை வழங்குவது நாமறிந்த உண்மை. எனவே கொள்கைகள் பேசி மக்களை குழப்ப முயலும் இப்படியானவர்கள் இனிமேலும் தளைவிடாது பார்க்க வேண்டியது மக்களின் பொறுப்பு.

ஆகவே எது எவ்வாறாயினும் ஆசனம் கிடைத்தால் போதும் என்ற கேவலமான சிந்தனையை விட்டு சூறா சபை, அந்த சபை, இந்த சபை என்று மக்களை ஏமாற்றி இன்று எல்லாவற்றையும் கலைத்து  விட்டு
தானே ராசா, தானே மந்திரி என்று வேறு கட்சிகளுடன் ஒப்பந்தம் பன்னும் அக்கட்சியின் நாயகன் தன்னிச்சையாக இயங்குவதும் பின்னால் மடையர்களாக மக்கள் கூட்டம் செல்வதும் மிகவும் கேவலமாக இருக்கிறது. எனவே இனியும் மக்கள் மந்தப்புத்தியுடன் இயங்கமாட்டார்கள் மக்கள் என்று நம்பி விடைபெறுகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -