றியாஸ் ஆதம்-
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் (05.07.2015) நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தினை அவரது மன்னார் மாவட்ட சுற்றுலா விடுதியில் வைத்து சந்தித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் எம்.ஏ.சீ நஜீப் தலைமையிலான மத்தியகுழு பிரதான உறுப்பினர்கள் அமைச்சரோடு அட்டாளைச்சேனை பிரதேச அரசியல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். இதன்போது மத்திய குழுவினர் விடுத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தாம் தேர்தலை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தில்; சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கட்சி விஸ்தரிப்பு பணிகளை முன்னெடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.



