அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம உரிமை வழங்க முடியாது - தேர்தல் ஆணையாளர்

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம உரிமை வழங்க முடியாதென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடாமையும், செயற்படாமையுமே அதற்கு காரணமாகும்.

இதேவேளை தேர்தலின் போது ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவரொட்டிகள் ஒட்டுதல் சட்டவிரோத செயலாகும், வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கு இலக்கம் வழங்கிய பின்னர் அவ் இலக்கங்களை விளம்பரப்படுத்துதல் அவசியம் என்பதனால் நடைமுறைகளில் சிக்கலான ஒன்றாகும் என தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று பிரதான வீதிகளில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் இலக்கங்களை வண்ணத்தின் மூலம் எழுதினால் அவ் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதை ஓரங்களில் உள்ள மின்சார தூண்களில் நிறப்பூச்சுகள் பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு மின்சார திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -