முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கியதற்கு எதிர்ப்பு வெளியிட்டு கூட்டணியை விட்டு விலகியவர்கள் குறித்து விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார். சிங்கள செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட்டாலும் உறுதியாக தாங்கள் தோற்றுவிடுவோம் என தெரிந்தவர்கள் சிலர் உள்ளனர்.
குறித்த சிலர் அரசியல் ரீதியில் அனாதைகளாக்கப்பட்டுள்ளமையினால் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்று தேர்தலில் போட்டியிட்டு பார்க்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.
அவ்வாறு செல்பவர்கள் எங்களுடன் இருந்தால் தான் நஷ்டம் ஏற்படுமே தவிர, சென்றால் அனுகூலம் எங்களுக்கே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
