வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சந்தேகம் -வாசுதேவ நாணயக்கார

க்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூட்டணி வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ள மைத்திரி தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியில் வேட்புமனு பெற்றுக்கொள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளமையினாலும், கூட்டணி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படுவதனாலும் வாசதேவ நாணயக்காரவுக்கு இச்சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையினால், இதுவரையிலும் கூட்டணியின் வேட்புமனு பட்டியலை ஒப்படைக்காமையினாலும் தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் மாற்றங்கள் இடம்பெற்றால் மக்களுடன் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -