ஜே.எம். வஸீர்-
எதிர்வரும் பாராளுமன்றபொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற மாவட்டங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ஆராயும் உயர்பீடக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை 2015.07.03ஆம் திகதி பி.ப. 04.00 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது தேர்தலில் தேசியகாங்கிரஸ் கூட்டுச்சேர்வதா? தனித்துப் போட்டிடுவதா என்பது பற்றி கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவுகளை பற்றி உயர்பீடம் முடிந்தவுடன் “இம்போட் மிரர்”
இணையத்தளத்தில் பார்வையிடலாம்!
