நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்ற வகவத்தின் 17வது கவியரங்கம் - திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் பிரதம அதிதி
வலம்புரி கவிதா வட்டத்தின் 17வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் கடந்த பௌணர்மி தினத்தன்று மிகவும் கலகலப்பாக நடைபெற்றது.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அரங்கில் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமைத் தாங்கினார். ஜூலை மாதம் 10ம் திகதி சோமசுந்தரப் புலவரது நினைவு நாள் என்பதனால் இவ்வரங்கு மிகவும் பொருத்தமானது என்று எடுத்துக் காட்டப்பட்டது.
கொழும்பு தமிழச் சங்க முன்னாள் தலைவரும், தற்போதைய இலக்கியக் குழு செயலாளருமான திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்து நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றியும், வகவ கவிஞர்களின், தற்போதைய கவிதைகள் குறித்தும் மிகவும் சுவாரஷியமாகவும், சபையின் வரவேற்பை பெறும் வண்ணமும் உரையாற்றினார்.
செயலாளார் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
“தங்கத் தாத்தா என்று புகழ்பெற்ற நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பல்வேறு பாடல்களால் தமிழ் உள்ளங்ககைக் கவர்ந்தவர். அவரது அனைத்துப் பாடல்களும் மிகவும் சுவையோடு பின்னப் பட்டவை. ‘கத்தரித் தோட்டத்திலே நின்று காவல் புரிகின்ற சேவகா…’, ‘ தாடியிழந்த வேடன்’ போன்றவை மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. தமிழ் அறிவும், ஆங்கில அறிவும் ஒன்றாய்ப் பெற்ற புலவர். பலருக்கு இலவச கல்வி வழங்கினார். அன்னாரது ஆற்றல், அறிவு குறித்து பண்டிதமணி சி.கணபதிபிள்ளை அவர்கள் சிறப்புற எடுத்துரைத்துள்ளார்கள். புலவர் தனது 75வது வயதில் காலமானர். அவரை நினைவு கூர்ந்து கொழும்புத் தமிழ்ச் சங்கம் ‘தங்கத் தாத்தா அகம்’ எனும் பெயரால் ஓர் விடுதியை நடாத்தி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
சந்தக் கவிமணி கிண்ணியா ஏ.ஏ. அமீh; அலி தலைமையில் மிகவும் சிறப்பான கவியரங்கம் நடைபெற்றது. ஒவ்வொரு கவிஞரை அழைப்பதற்காக அவர் சொன்ன கவிதை வரிகள்கள் பிரதம அதிதியினதும், சபையினதும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
வீச்சான கவிதைகளோடு கவிஞர்கள் ஜின்னாஹ் ஷரிப்தீன், எஸ்.எம்.அலி அக்பர், மேமன்கவி, சங்கர் கைலாஷ், இப்னு அஸூமத், மிஹிந்தலை ஏ.பாரிஸ், வெளிமடை ஜஹாங்கீர், எம்.ஏ.எம் ஆறுமுகம், போரத்தொட்டை ரிஸ்மி, வாழைத்தோட்டம் எம். வஸீர், நியாஸ் ஏ. சமத், பாத்திமா இஸ்ரா, பிரேம்ராஜ், இளநெஞ்சன் முர்ஷிதீன், எஸ். தனபாலன், கலைக்கமல், கவிக்கமல், எஸ்.ஏ.கரீம், ஈழகணேஷ் ஆகியோர் கவியரங்குயினை களை கட்டச் செய்தனா;.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு முன்னாள் பணிப்பாளர்; திரு. வீ.திருஞானசுந்தரம், உடுவை தில்லை நடராஜா, திருமதி. இரகுபதி பாலஸ்ரீதரன், டொக்டர் தாசிம் அகமது, எஸ்.ஐ.நாகூர்கனி, சமூகஜோதி எம்.ஏ.ரபீக், வெலிப்பன்னை அத்தாஸ், இத்ரீஸ். த.மணி. ஜெயசீலன் போன்றோர்; சபையை அலங்கரித்தனர்.
பிரதம அதிதி பாலஸ்ரீதரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு முன்னாள் பணிப்பாளர்; திரு. வீ.திருஞானசுந்தரம் ஆகியொர் தங்களால் வெளியிடப்பட்ட நூல்களை வகவத்திற்கு அன்பளிப்புச் செய்தனர்.
அடுத்த பௌணர்மி கவியரங்கின் தலைவராக கவிஞர் சங்கர் கைலாஷின் பெயர் அறிவிக்கப்பட்டது.
, தேசிய அமைப்பாளர் கவிஞர் கலா விஸ்வநாதன் நன்றியுரை வழங்கினார்.

