எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரே கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகள் மற்றும் பல பெரும்பான்மை குழுக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பிரதிநிதிகள் சிலர் நேற்று இரவு ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களுடன் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதும் நாங்கள் அனைவரும் நொறுங்கி போய் உள்ளோம் என மிகவும் மனவருத்தத்துடன் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
