SLMC உடன் இணைந்து களமிறங்குவது சந்தோஷமளிக்கிறது NFGG அப்துல் ரஹ்மான்!

அலுவலக செய்தியாளர்-

டைபெற இருக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவது நல்லாட்சியில் நாம் இருக்கிறோம் என்பதனைக் காட்டுகிறது. 

இதனால் நாம் சந்தோஷமடைகிறோம் இது என்றும் நிலைக்க வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் முன்னனியில் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாறுஷலாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் நல்லாட்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறோம். அதன் வெளிப்பாடாக இன்றைய கூட்டு அமைந்திருக்கிறது. இதனை மக்கள் பெருமனங்கொண்டு ஏற்றுக்கொண்டு சந்தோஷமடைவார்கள். நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டிய முக்கிய தேவையில் இருக்கிறோம்.

எனவே நாட்டில் நல்லாட்சி வளர சமூகம் ஒன்றினைவது காலத்தின் தேவையாகும். எனவே மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் நம் இன்று இணைந்திருப்பதனால் சமுகத்துக்கான நன்மை மேலோங்கும் என்றும் பொறியியலாளர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -