வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா -(Photos & Audio)

முன்னார், விடத்தல்தீவு சுஐப் எம். காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையுடன் நேற்று மாலை (06) கொழும்பு-10, தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீனும், விடே அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூதும் சிறப்பு அதிதிகளாக கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத், கிழக்குமாகாண சபை உறுப்பினர் சுபைர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல்யாஸ், முசலி பிரதேச சபை தவிசாளர் டபிள்யு. எம்.யஹ்யான், உட்பட பல அரசியல் பிரமுகர்கள், வடமாகாண புத்தி ஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது வரவேற்புரையை சமுகஜோதி எம்.ஏ.றபீக் வழங்கியதுடன், நூலாசிரியர் அறிமுகத்தினை கலைஞர் கலைச் செல்வன் வழங்கியதுடன், வாழ்த்துரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. எம். நிலாம் வழங்கினார், கருத்துரையை ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் வழங்கினார், நூல் ஆய்வினை கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ். அனீஸ் வழங்கினார், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகைர் சிறப்புரையை வழங்கினார், சிறப்பு விருந்தினர் அமைச்சர் றிஷாத் பதியுதீனும், கௌரவ விருந்தினர் பஷீர் சேகுதாவுதும் உரை நிகழ்த்திய பின்னர். ஏற்புரையை நூலாசிரியர் சுகைப் எம் காசிம் வழங்கினார்.

நூலின் முதற்பிரதியை தேசமான்ய யஹ்யான் பெற்றுக் கொண்டதுடன் ஏனைய பிரதிகளை பிரமுகர்கள் அனைவரும் அதிதிகளிடமிருந்தும் நூhசிரியரிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஆற்றிய உரையின் ஒலி வடிவம்..


ஏ.எஸ்.எம்.ஜாவித், ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
(கொழும்பு நிருபர்கள்)



தினகரன் வாரமஞ்சரி இனை ஆசிரியர் சுகைப் எம்.காசீம் எழுதிய 'வடபுல முஸ்லீம்களின் மீள் குடியேற்ற சவால்கள'எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்   ஊடகவியலாளர்கள் , அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் முஸ்லீம் மீடியா போரத்தின் உறுப்பிணர்கள்  கல்வியலாளர்கள் என மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

இந் நிகழ்வில்  உரையாற்றிய கலாநிதி அனீஸ் - இந்த நூலில் மிக முக்கியமாணவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. 1990 ல் இந்த நிகழ்வு நடைபெறும்போது இந்த மககளோடு மக்களாக இருந்து தன்னையே அர்ப்பணித்த முன்னாள் பிரதியமைச்சர் சுந்தர முர்த்தி ஆபுபக்கரின் பெயர் இடம் பெறவில்லை. 

அதேபோன்று தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர்  சிவ சிதம்பரம், வடக்கில் வெளியேற்ற பட்ட முஸ்லீம்கள் மீளக் குடியமர்த்தப்படாத வரை அந்த மன்னில் எனது கால் பதியப்பாடமாட்டாது என்று சொன்னவர். பிறகு அவர் மரணித்தபின் அவரது உடலையே கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டவர். அதே போன்று கலாநிதி அனீஸின் பெயர் இடம்பெறவில்லை மாணவர் காலத்தில் ;இருந்தே இம் மக்களின்  விடிவுக்காக நான் பாடுபட்டவன் எனது பெயர் கூட இடம் பெறவில்லை எனக் கூறினார்.

ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகு தாவூத் - மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களது அமைச்சில் வைத்தே முதன் முதலில் சுகைப்பின் சந்திப்பு ஏற்பட்டது.இந்த நாட்டில் உள்ள பௌத்த சமுகம் முஸ்லீம்களைப் பார்த்து – நில ஆக்கிரமிப்பாளர்கள், மிருகங்களைக் கொள்பவர்கள், சட்டவிரோதமாக மரங்களை அழிப்பவர்கள், காடுகளையும் வனபிராந்தியத்தையும் அழிப்பவர்கள், காணிகளை களவெடுப்பவர்கள்  என்று அபகீர்த்தியை இந்த சமுகத்தினருக்கு ஒரு வடுவை ஏற்படுத்தியுள்ளார்கள். இதில் அரசியல்வாதிகள் வெற்றியாளர்களாம். 

ஆனால் இதனை எவ்வாறு நாம் கையாழ்வது. எவ்வாறு நாம் உண்மைத் தன்மையை அடுத்த  சமுகத்திற்கு கொண்டு செல்வது. ஒரு தலைமையிடம் மட்டும்  இதனை விட்டுச் செல்லாமால் ஏனையோறும் இதனை பங்கெடுத்து அந்த அபாண்டகரமான வடுக்களை கலைத்து சுமுகமாக ஒரு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்களையும் இனைத்துக்கொண்டு  அவர்களிடமிருந்தும் நாம் நமது நியாயத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

இந்தப் பிரச்சினையை நவமனி, விடிவெள்ளி பத்திரிகைகளில் தமிழில் எழுதி அதனை பெரும்பாண்மைச் சமுகத்திற்கு உணர்த்த முடியாது எமது உண்மைத் தன்மைகள் சிங்கள ஊடகங்களில் சரியான தகவல்கள் சொல்லப்படல் வேண்டும். அதன் மூலம் அந்த மக்களது அபிமாணத்தையும் நாம் வென்றெடுக்க வேண்டும்.

ஆமைச்சர் றிசாத் தனிமையில் நின்று இவ்விடயத்தினை கையாழ்வதினால் அவருக்கு முழுக்க முழுக்க வடகில் முஸ்லீம் வாக்கு வங்கி  ஆதரவு இருக்கின்றது. அதே போன்று கிழக்கிலும்; ஆதரவு பெருகி வருகின்றது. இப்பிரச்சினையை கட்சிகளுக்கப்பால் நின்று வாக்குகளுக்கு அப்பால் நின்று ஏனைய தலைமைகளையும் இணைத்து வில்பத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். எனவும் பாராளுமன்ற உறுப்பிணர் பசீர் சேகுதாவூத் உரையாற்றினார்.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் -

இந்த முஸ்லீம்கள் அவல நிலை வில்பத்து விவகாரம் பற்றி நேற்று இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் அழைத்து வடக்கு வாழ் முஸ்லிம்களை 1990களில் 1 இலட்சமபேர் விரட்டப்பட்டு இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை. என்றும் முஸ்லீம்கள் மீதும் அபாண்டமாக குடியேற்றுவதாகவும் தெரிவித்து சில ஊடகங்கள் அப்பாண்டமாக என் மீது பழிசுமத்துவதையும் அவர்களுக்கு விளக்கும்  ஒரு சந்திப்பை நடாத்தினேன்.

அங்கு ஒரு தனியார் ஊடகம் அங்கு வந்ததாகவும் அவர்களை அங்கு விடவில்லை என்றும் எண்னிடம் தற்பொழுது தெரிவித்து எனது தொலைபேசியில் கேள்விகளை கேட்டுவிட்டு அவர்கள் இலங்கை பற்றி நான் அவதூரமான கருத்துக்களை வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து சொல்வதாக எனது தொலைபேசி செய்தியை சிலவற்றை  கட்பண்னி அவதூரான செய்திகளை இந்த தனியார் ஊடகமொன்று பரப்புகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் எமது பகுதி அரசியல்வாதியே உள்ளார்.

முஸ்லீம்களது காணிப்பிரச்சினையை திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் உள்ளன. இன்னும் இவை தீர்க்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ தற்போது உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவோ தீர்க்க வில்லை. ஆனால் நானும் இந்த அமைச்சினைப்  பொறுப்பை விட்டுவிட்டு அல்லது தூக்கி எறிந்துவிட்டு தமிழர் தேசிய முன்னணி இரா சம்பந்தன் போன்றும், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார போன்று ஒரு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் எனது முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினைக்கு போர வேண்டி ஏற்படும். அதனை நான் செய்யவும் தயார். 

ஆனால் எந்த ஒரு ருபாவோ சதமோ பெறாமல் மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம். இதற்காக முஸ்லீம் சமுகம் 95 வீதமாக வாக்களித்தார்கள். ஆனால் ஏனைய கட்சித் தலைவர்கள் தம்மிடம் அரசியல் தலைகள் இத்தனை உண்டு. எவ்வளவு தருவீர்கள் ? என பேரம் பேசினார்கள்.  ஆனால் நேற்றுக் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உலக சூற்றாடல்  தினத்தில் அவர் பேசிய பேச்சுக்களில் வைத்து வில்பத்து முஸ்லீம்கள குடியேற்றத்தைப் காட்சிப்படுத்தி  முஸ்லீம்கள் இந்த நாட்டில் காணி அபகரிப்பாளார்கள். 

கட்டு வனத்தை ஆக்கிரமிப்பவாகள். போன்ற செய்திகளை சில சிங்கள ஊடகம் மட்டுமல்ல அரச ஊடகங்கள் இதனை ஒலி ஒளிபரப்பியுள்ளன.கடந்த அரசின்  9 மாதத்திறகுள் கடைசியாக சுற்றாடல் அமைச்சராக இருந்த அனுர பிரியதர்சன யாப்பாவே வில்பத்து பகுதியில் அண்டியுள்ள முஸ்லீம்களது பரம்பரை இருந்த வந்த 6500 கெக்டேயர் காணிகளை வனவலமாக வர்த்தமானியில் அரச காணியாக அனுமதித்துள்ளார். 

முன்னைய அரசு தற்போதைய அரசின் ஆதரவு இல்லாமல் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் நான் நேரடியாக வடக்கு முஸ்லீம்கள் மீள குடியேற்றம் சம்பந்தமாக எழுதி பாக்கிஸ்தான், கசகஸ்த்தான், குவைத், கட்டார், சவுதி அரேபியா நாடுகளுக்கும் எழுதினேன்.  சுpல இலங்கையில் உள்ள உள்ளுர் முஸ்லீம் தனவந்தர்களை அனுகி 500 வீடுகளையே இதுவரை வடக்கில் முஸ்லீம்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். மேலும் 16 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்ட வேண்டியுள்ளது. 

இந்திய வீட்டுத்திட்டத்தில் கூட ஒரு இலட்சம் முஸ்லீம்களுக்கு ஆக்க குறைந்தது 7ஆயிரம் வீடுகளாவது நிர்மாணித்;திருக்க வேண்டும். அவர்களும் ஆகக் குறைந்த 300 வீடுகளை நிர்மாணித்துவிட்டு இறுதியில் தரமுடியாது  என கையை விரித்துவிட்டார்கள். 

ஆனால் எனக்கு வாழைத்தோட்டம் உள்ளதாகவும் சில தமிழ் சகோதரைக் கூட அழைத்து தொலைக்காட்சியில் பேசி எனக்கு எதிராக சதித் ;திட்டம தீட்டுகின்றனர். அநத குரல் கொடுத்த தமிழ் அன்பரே என்னிடம் மண்னிப்பு கேட்டார். தனக்கு தொழில் பெற்றுத்தருவதாகவும் இவ்வாறு எனக்கு எதிராக பேசச் சொன்னதாகவும் அவர் என்னிடம் சொல்லுகின்றார். இதனை நான் வளர்த்த கடா என் நெஞ்சில் எட்டி உதைக்கின்றது. என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அங்கு உரையாற்றினார்.

அஸ்ரப். ஏ. சமத்
(கொழும்பு பிரதான நிருபர்)


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -