கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கிட்டங்கி வாவியில் குளிக்கச் சென்ற த.லுக்சாந்த் (வயது –16) எனும் மாணவன் இன்று (07) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
கல்முனை இராமகிருஸ்னமிசன் கலவன் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் சேனைக்குடியிருப்பை சேர்ந்த இந்த மாணவன் நண்பர்களுடன் நீராடாரச் சென்ற வேளையிலேயே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து பிரதேச பொது மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போதிலும் நீரில் மூழ்கியவரை கண்டெடுக்கமுடியாது போனதால் கல்முனை பொலிசார் கடற்படையினருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியதையடுத்து ஒலுவில் கடற்படை முகாம் சுழியோடிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டெடுத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எம்.ஜபீர்
(சவளக்கடை பிரதான நிருபர்)



