அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சாமானிய மனிதர்களையும் எட்டி வருகிறது. அந்த வகையில் செல்போன்களில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொள்கிற மோகம், அனைத்து தரப்பினரையும் கவர்கிறது. இந்த நிலையில், செல்போன்களில் ‘செல்பி’ படம் எடுப்பதற்கு பயன்படும் வகையில் புதிய செயலி ஒன்றை ‘டிரிக்கர்டிராப் செல்பி’ என்ற பெயரில், டிரிக்கர்டிராப் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியை பயன்படுத்துவது எளிதானது. இந்த செயலி, ஒலி மூலமாக செல்போன் கேமராவை இயக்குகிறது. உங்கள் போன் கேமராவை சுழல விட்டால் போதும். உங்களை படம் எடுக்கும் பொறுப்பை செயலி கவனித்துக் கொள்ளும். இந்த செயலியை ஐஓஎஸ் டோரில்ஸ் இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.(ந)
