மாகாண சபை உறுப்பினர் சுபையிர் உரை!

றியாஸ் ஆதம்-

தாதிச்சேவை என்பது உலகிலே உன்னதமாக போற்றுகின்ற சேவையாகும் இச்சேவையிலுள்ளோர் ஒரு நோயாளியிடம் தொடர்ச்சியாக அருகிலிருந்து கொண்டு அதிக நேரம் செலவழிப்பதும் தாதியர்களே என கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஐவா தாதியர் பயிற்ச்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக்; கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன பேதமற்ற சகோதரத்துவம் கொண்ட ஒரு சேவை தாதிச் சேவையாகும் இவ்வாறு செயற்படுகின்ற தாதியர்களின் உரிமையை பாதுகாப்பது எல்லோருடைய கடமையுமாகும் இந்தத் தாதிச் சேவையினூடாக சிறந்த நோயாளர் பராமரிப்பினை வழங்குவதே தாதிச்சேவையின் குறிக்கோளாகும். 

ஒரு தாதி என்பவர் தொழிலுக்காக இப்பதவியை பெற்றுக்கொண்டாலும் இறுதியில் தாதிச்சேவையானது ஒரு இனபேதமற்ற மனித நேயம் கொண்ட ஒரு சேவையாகும். ஒரு தாதியானவர் விட்டுக்கொடுப்புடனும், சகிப்புதன்மையுடனும் செயற்பட்டு எந்த ஒரு உயிருக்கும் அநியாயம் செய்யாதவராகவே செயற்படுகின்றார்.

கடந்த காலங்களில் நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது கிழக்கிலே தாதிப்பற்றாக்குறை அதிகமாக காணப்பட்டது. அக்காலத்தில் நான் மத்திய அரசிடம் சென்று தாதியர்களை கொண்டுவந்து சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்தேன். அன்றைய காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் குறைவாக காணப்பட்டதனால் வெளிமாவட்ட தாதிகளை கொண்டுவந்து சேவைகளைப்பெற்றுக் கொண்டோம் பின்னர் வெளிமாவட்ட தாதியர்கள் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது மீண்டும் கிழக்கில் தாதிப்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனைக் கருத்திற் கொண்டு கலைப்பிரிவு கற்ற மாணவர்களையும் தாதித்சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களும் நாங்களே அன்று மத்திய அரசின் அனுமதியுடன் அமைச்சரவையில் விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து வடக்கிலும் கிழக்கிலும். கலைப்பிரிவு கற்ற மாணவர்களையும் தாதிச்சேவையோடு உள்ளீர்ப்புச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டோம் பின்னர் அதில் வெற்றியும் கண்டோம். 

ஆகவே இந்த ஐவா கல்லூரி எமது நாட்டில் அதிகளவிலான தாதியர்களை உருவாக்கியதன் மூலம் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த வருமானத்தையீட்டுகின்ற நிலையில் தாதிச்சேவை சிறந்து விளங்குகின்றது. 

கடந்த மாகாண சபை ஆட்சியின் போது நான் சுகாதார அமைச்சராகவிருந்தபோது கிழக்கு மாகாணத்தில் சுகாதாரதுறையை அபிவிருத்தி செய்வதற்கு பல அர்ப்பணிப்புகளை செய்தேன் இன்று கிழக்கு மாகாணத்தினுடைய சுகாதாரத்துறையின் சீரழிந்து காணப்படுகின்றது. 

அண்மைக்காலமாக மூதூர் வைத்தியசாலையின் நிலமையை பார்க்கும்போது கவலையளிக்கின்றது. அங்கு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நிகழ்ந்தவன்னமுள்ளது. அதேபோன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் புடைசூழப்பட்டுள்ளது. இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரே தன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் தலையிலே பழியை போட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் நிலைமையே காணப்படுகிறது. கடந்த மாகாண சபை ஆட்சியில் நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது மூதூர் வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகரை கொண்டு வந்தவனும் நானே. 

அத்தோடு அவ்வைத்தியசாலைக்கு பௌதீக வளங்களையும் கொண்டு வந்தவர்களும் நாங்களே புல்மோட்டை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தியவர்களும் நாங்களே தோப்பூர், கிண்ணியா போன்ற வைத்தியசாலைகளுக்கும் அதிகமான நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி செய்தவர்களும் நாங்களே இவைகளெல்லாம் ஒரு கடற்படை அதிகாரியாகவிருந்த முன்னால் கிழக்கு மாகாண ஆளுநரின் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் அச்சமின்றி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்களும் நாங்களே ஆனால் அன்றிருந்த நிலைமைகள் இன்றில்லை தற்போது முதலமைச்சர் சமகாலத்தில் கூறிவரும் நொண்டிக்குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -