ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
அஹமெட் இர்ஸாட்:- 19வது திருத்தச் சட்டம் பாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அதற்கு உங்களுடைய கட்சி ஆதரவளித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டால் உங்களுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு எதுவாக இருக்கும்?
பைசல் காசிம்:- உண்மையில் சிறுபான்மை சமூகத்துக்கு விகிதாசார தேர்தல் முறைமையே சிறந்தது என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை. ஏன்னென்றால் முஸ்லிம்கள் வடகிழக்கில் செறிந்து வாழ்ந்தாலும் கூட ஏனைய சிங்கள பிரதேசங்களை அண்டிய பிரேதேசங்களில் எல்லா சமூகங்களோடும் கலந்து வாழுகின்றார்கள். அந்தவகையில் நான் குறிப்பிட்ட பிரதேசங்களை ஒன்றினைத்து ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதி ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் அது விதாசார தேர்தல் முறைமையினாலே முடியும்.
அஹமெட் இர்ஸாட் :- அன்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் அக்ல இலங்கை முஸ்லிம் காங்கிரசின் எழுச்சி அதிகரித்து வருவது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? சீராஸ் மீராசாஹிப்பின் எதிர்பாச்சலை எவ்வாறு நினைக்கின்றீர்கள்?
பைசல் காசிம்:- அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் வரவு முஸ்லிம் காங்கிரசுக்கு சவாலாக அமையும் என்பது உண்மைக்கு புறம்பானவிடயமாகும். கிட்டத்தட்ட 15வருடங்காலாக அமைச்சர் அதாவுல்லா அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வாழ்ந்து முஸ்லிம் காங்கிரசை அழித்தொழிக்கலாம் என்ற பகற்கனவினை கண்டார். ஆனால் இன்று அவருடைய விலாசம் அவர் கையில் இறுக்கின்றதா எனக் கேட்டால் அதற்குறிய பதிலை நீங்களே அறிவீர்கள்.
இதுதான் நீங்கள் கேட்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிலையும். சாய்ந்தமருது என்பது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டை. எத்தனை சீறாஸ்கள் துரோகம் இளைத்தாலும் முஸ்லிம் காங்கிரசின் ஆணிவேரினை அம்பாறை மாவட்டத்தியிருந்து யாராலும் பிடுங்கி எடுக்க முடியாது.
அஹமெட் இர்ஸாட் :- நீங்களே குறிப்பிடுகின்றீர்கள் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என. அவ்வாறிருக்கையில் முஸ்லிம் காங்கிரசினால் சாய்ந்தமருது புறக்கனிக்கப்படுவதாக கூறப்படுக்கின்றதே?
பைசல் காசிம்:- முஸ்லிம் காங்கிரசானது ஒரு போதும் சாய்ந்தமருது மக்களை பின்னோக்கி பார்த்ததில்லை, பார்க்கப்போவதுமில்லை. எமது கட்சியானது சாய்ந்தமருதினை சேர்ந்த நிஜாமுடீன் அவர்களுக்கு எம்பி பதவியையும் கொடுத்திருக்கின்றது. அப்படி என்றால் எங்கே எவ்விடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதினை புறக்கணித்தது?
அஹமெட் இர்ஸாட் :- சீறாஸ் மீராசாஹிப் அன்மையில் படித்தவர்களுக்கு முஸ்லிம் காங்கிரசில் இடமில்லை என்ற கருத்தினை இடம்பெற்ற நேர்காணலின் பொழுது தெரிவித்து பாரிய குற்றச்சாட்டினை உங்களுடைய கட்சிக்கு எதிராக சுமத்தியிருந்தார் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பைசல் காசிம்:- படித்தவர்கள் எங்களுடைய கட்சியில் தேவைக்கு அதிகமாக இருக்கின்றார்கள். சிறாஸ்மீராஹிப்பை பொறுத்தவரையில் படித்தவர் அவர் மட்டும்தான் என நினைத்துக்கொண்டிருக்கின்றார். அதுதான் அவரை இவ்வாறான குற்றச்சாட்டினை எமது கட்சியின் மேல் சுமத்தச் சொல்கின்றது. சீறாஸ் மீராசாஹிப்புக்கு ஜாபகம் இருக்குமோ தெரியாது.
கடந்த அவருடைய தேர்தலில் அதற்குறிய வாய்ப்பினை நான்தான் கட்சியுடனும் செயலாளர் ஹசன் அலியுடனும் கதைத்து பெற்றுக்கொடுத்தேன். இன்று படித்தவர்கள் படிக்காதவர்கள் என கதை சொல்லுகின்றார். நான் கேற்கின்றேன் அவர் என்ன படித்துவிட்டு முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார் என?
அஹமட் இர்ஸாட் :- சீறாஸ் மீராசாஹிப் அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தும் ஏன் அவருக்கு மேயராக இருக்கும் வாய்ப்பினை தொடர்ந்து நீங்கள் கொடுக்கவில்லை? அதற்கு ஏதும் அரசியல் காரணங்கள் இருக்கின்றதா?
பைசல் காசிம்:- எந்த அரசியல் காரணமும் கிடையாது. நிசாம் காரியப்பர் கட்சியில் நீண்ட நாள் போராலி. அது மட்டுமல்ல அவரைத்தான் கட்சியானது முதன்மை வேட்பாளராக களமிறக்கியிருந்தது. ஆனால் சீராஸ் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்த காரணத்தினாலேதான் சீறாஸ்க்கு முதலில் மேயர் பதிவினை கொடுத்தோம். அதனை சாய்ந்தமருது போராலிகளும் அறிவார்கள்.
முஸ்லிம் காங்கிரசைப்பற்றி மக்கள் அறிவார்கள். அரசியல் அறிமுகத்தினை பெற்றுவிட்ட பின்னர் அரசியலில் நிலைக்கலாம் என நினைது சீற்றாஸை போன்றவர்கள் பகற்கனவு காணுகின்றனர். அவர்களுடைய கனவு இறுதிவரைக்கும் கனவாகவே இருக்கும் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை.
அஹமட் இர்ஸாட் :- முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ரும் அம்பாறை மாவட்டத்தின் மண்வாசனையில் பிறந்தவர் என்ற ரீதியில் உங்களுடைய கட்சியின் கரையோர மாவட்ட கோரிக்கையானது எந்த நிலையில் இருக்கின்றது?
பைசல் காசிம்:- பெரும்தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரப் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான அலகுதான் கேட்டிருந்தார். மாறாக தனியான கரையோர மாவட்டம் கேட்கவில்லை. அன்று இருந்த அரசியல் களத்துக்கு அந்த தேவைப்பாடு சரியாக அமைந்திருந்தது. ஆனால் இன்று உள்ள நிலைமையில் எங்களின் கோரிக்கையான கரையோர மாவட்ட கோரிக்கையானது மிகப்பொறுத்தமானதாக இருக்கின்றது.
அரசியலில் தங்களது ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் தனிநாடு கேற்பதைப் போன்று முஸ்லிம்களும் கரையோரா மாவட்டம் எனும் தனிநாடு கேற்கின்றனர் என எதிரிகள் அரசியல் செய்கின்றனர். ஆனால் உண்மை எப்போதும் தோற்பதில்லை. அவைகள் நிரூபிக்கப்படுக்கின்றன என்ற யதார்த்ததின் அடிப்படையில் எங்களுடைய கரையோர மாவட்ட கோரிக்கியினை வென்றே ஆகுவோம் என்ற நிலைப்பாட்டில் நானும் எனது கட்சியும் முன்னோக்கி பயணித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட் :- உங்களுடைய கட்சியின் தலைமை கிழக்கு மாகாணதில் போட்டியிடப்போவதாக கூறப்படுக்கின்றதே. அவ்வாறு போட்டியிட்டால் உங்களுடைய ஆதரவு கட்சியின் தலைமைக்கு இருக்குமா?
பைசல் காசிம்:- கட்சியின் தலைமையானது தேசிய ரீதியில் கட்சியின் வளர்ச்சியையும் அதன் இஸ்தீரத்தன்மையையும் கருத்தில் கொண்டே ஏனைய பிரதேசங்களில் போட்டி இடும் நிலைமைக்கு தள்ளப்படுக்கின்றது. அந்தவகையில் வரலாற்றினை பர்ப்போமானால் அதில் தலைமையானது ஏனைய பிரதேசங்களில் தேர்தலில் குதித்து வெற்றியும் கண்டுள்ளது. இது காலத்தின் தேவையாகும். கட்சியின் தலைமை என்ன முடிவினை கூட்டாக சேர்ந்து எடுக்கின்றதோ அதற்கு கெளரவம் அளித்து ஒத்தாசை வழங்குவதானது போராலிகளின் தார்மீகப் பொறுப்பாகும்.
அஹமட் இர்ஸாட் :- உங்களுடைய கட்சியின் தலைமையானது சாய்ந்தமருதினை புறக்கனிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நீங்கள் ஏதும் காரணங்கள் வைத்துள்ளீர்களா? முக்கியமாக முதலமைச்சு தருவதாக சாய்ந்த மருதுக்கு கூறிவிட்டு ஏராவூருக்கு கொடுத்தமையினை போராலிகள் ஏற்றுக்கொள்வார்களா?
பைசல் காசிம்:- சாய்ந்தமருதினை சேர்ந்த சகோதரர் ஜெமீலுக்கு முதலமைச்சு தருவதாக தலைமை கூறியது சம்பந்தமாக தனக்கு ஏதும் தெரியாது. இருந்தும் கட்சியின் தலமையானது எந்த நேரத்தில் எது கட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த வழிமுறை என நினைத்து கிழக்கின் முதலைச்சு பதவியினை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொடுத்துள்ளமையானது அவருடைய தலமைத்துவத்தின் முன்மாதிரியையும், பிரதேசவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகவுமே நான் பார்க்கின்றேன்.
அஹமட் இர்ஸாட் :- வருகின்ற தேர்தலில் தனியாகவா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தா போட்டியிட தீர்மானிதுள்ளீர்களா?
பைசல் காசிம்:- தேர்தக்ல் அறிவிப்புக்கு பின்னர் கட்சியும் கட்சியினுடைய உயர்பீடமும் எடுக்கின்ற முடிவிலே அதற்கான விடை தங்கியுள்ளது.
அஹமட் இர்ஸாட் :- உங்களுடைய கட்சியின் நிலைமை அதாவுல்லாவின் கோட்டையான அக்கறைப்பற்றில் எந்த நிலையில் இருக்கின்றது?
பைசல் காசிம்:- எமது கட்சி உறுப்பினர் தவம் அக்கறைப்பற்றில் அதாவுல்லா உறுதியான நிலையில் இருக்கும் பொழுதே மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றமையானது அக்கறைப்பறு யாருடைய கோட்டையும்மல்ல என்பதனை நிரூபித்துக் காட்டியது. வருக்கின்ற பொதுத்தேர்தலில் அதனை மீண்டும் நாங்கள் நிரூபிப்போம்.
அஹமட் இர்ஸாட் :- நீங்கள் பாராளுமன்றம் சென்றதற்கு பிற்பாடு உங்களுடைய பிரதேசத்துக்கு நீங்கள் செய்துள்ள அபிவிருத்திகள் சம்பந்தமாக திருப்தியுடன் இருக்கின்றீர்களா?
பைசல் காசிம்:- பத்து வருடங்களாக பாராளுமன்ரதில் இருக்கின்றேன் அக்காலத்தில் அரசாங்கங்களுடன் அதிகாரத்தில் எமது கட்சியானது இருந்தமை குறைவாகவே இருக்கின்றது. இருந்தும் வீதி புணரமைப்பு, வேலைவாய்ப்பு என என்னால் முடிந்தளவு எனது பிரதேசத்துக்கு செய்து கொடுத்துள்ளேன். அதற்கு எனக்கு வாக்களித்த மக்களே சாட்சியாகும். நிந்தவூர், அட்டாளச்சேனை, பாலமுனை, ஒலுவில், நட்பட்டிமுனை, மருதமுனை, போன்ற பிரதேச மக்கள் அதனை அறிவார்கள் என்ற திருப்தியும் மகிழ்சியும் என்னிடம் இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட் :- மாவட்டத்தின் காணிப்பிரச்சனை சம்பந்தமாக நீங்கள் எந்த நிலைப்பட்டில் உள்ளீர்கள்?
பைசல் காசிம்:- இதுதான் எமது முக்கியமான பிரச்சனையாகும். இதை ஒட்டித்தான் எங்களுடையய கரையோர மாவட்ட கோரிக்கையும் அமைக்கின்றது. காடுகளுக்குள் எங்களுடைய காணிகள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் சானக்கியத்துடன் கலந்த தீர்வினை பெற்றுக்கொடுக்க நங்கள் முயற்சித்து வருக்கின்றோம். நான் அமைச்சர் ஜானகபண்டார தென்னகோனிடம் வேண்டிக்கொண்டதற்கினங்க அவர் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சுமூகமானா திர்வினை மேற்கொண்டிருந்தார். இருந்தாலும் எமது கட்சியும் நாங்களும் எதிர்காலத்தில் இப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக சிறந்த தீர்வினை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கையுடன் எமது அரசியல் காய்நகர்தல்களை சாதுரியமான முறையில் முன்னெடுத்து வருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட் :- முன்னாள் அமைச்சரும் உங்களுடைய கட்சியின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் எந்த கட்சியில் இருக்கின்றார். அன்மையில் ஏராவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈரோஸ் பாலகுமார்தான் தன்னுடைய தலைவர் என்று கூறியமையானது உங்களுடைய கட்சியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட எதிரொலியாக நீங்கள் நினைக்கவில்லையா?
பைசல் காசிம்:- அரசியலில் சில சில முரண்பாடுகள் ரசியல் வாதிகளிடதிலும் கட்சிக்குள்ளும் வருவதானது இயல்பானவிடயமாகும். அந்தவகையிலே பசீர் சேகுதாவூத்துக்கும் எமது கட்சிகுள் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிடுக்காலாம். அது சர்வசாதரணவிடயமாகும். ஆனால் பசிர் சேகுதாவூத் எங்களுடதான் இருக்கின்றார். அவருடைய தலைவர் பால்குமார் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் என்னிடம் இல்லை.
ஏன்னென்றால் அவர் அரசியலையும், ஆத்மீக சிந்தனையையும் கற்றுக்கொண்டது ஈரோஸ் கட்சியிடமும் அதன் தலைவர் பாலகுமாரிடமும்தான் என்பதை நான் ஏறுக்கொள்கின்றேன். உண்மையை கூறுவதில் பிழைகள் ஏதும் கிடையாது என்பதில் நான் ஒரே கருத்துடன் வாழ்பவன்.
அஹமட் இர்ஸாட் :- சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் உங்களுடைய கட்சியானது பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கு தடுமாறுவதற்கான காரணம் என்ன?
பைசல் காசிம்:- சம்மாந்துரை மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து செயற்படுக்கின்றனர். சுய இலாபங்களுக்காக தங்களுக்கு தேவையாக கருதப்படும் கட்சிகளுக்குள் சென்று விடுவார்கள். சம்பாந்துரையானது முஸ்லிம் காங்கிரசஸ் போராலிகள் கட்டியாக வாழ்ந்த பிரதேசமாகும். அங்கு தனியாக உறுப்பினரை பெற்றுக்கொள்ளும் மக்கள் சக்தி உள்ளது. அம்மக்கள் தெளிவு பெறவேண்டியுள்ளது. ஆகவே எதிர்வருக்கின்ற தேர்தலில் சிறந்த முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட் :- உங்களுடைய பிரதேச மக்களுக்கு வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தம்மாக எதும் கூற விரும்புகின்றீர்களா?
பைசல் காசிம்:- எனது மக்கள் பைசல் காசிம் யார் என நன்கறிவார்கள். நான் பத்து வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து எதைச் செய்துள்ளேன் அல்லது எதனை எனது சுயநலத்துக்காக பயண்படுத்தியுள்ளேன் என்பது எனது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தவகையிலே வருக்கின்ற பொதுத்தேர்தலில் எனது மக்கள் என்னுடனே இருந்து எனது கட்சியினை மீண்டும் ஒரு சக்திமிக்க கட்சியாக தேசியத்தில் உருவாக்கி என்னையும் பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்து அம்பாறை மாவட்டத்து மக்களினுரிமைகளை முஸ்லிம் காங்கிரசினூடாக வென்றெடுக்க முடியும் என்ற காத்திரமான முடிவினை எடுப்பார்கள் என அல்லாஹ்மீது நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றேன்.

