இறக்காமம் எஸ்.எம்.சன்சீர்
அம்பாறை - ஹிங்குராண பகுதி கரும்புத் தோட்டத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தமண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் அம்பாறை - ஹிங்குராண பகுதியைச் சேர்ந்தவர் எனவும் எமது ஊடகவியலாளர் எஸ்.எம்.சன்சீர் இடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் கடந்த 24ம் திகதி காணாமல் போன 78 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.