சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நன்மை கருதி அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு உப மின்நிலையத்தை நிரந்தர மின்சாரப் பாவனையாளர் சேவை நிலையமாக மாற்றித்தருமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கேட்டுக்கொள்கின்றார்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் வழங்கப்பட்டு 25 வருட காலமாக அட்டாளைச்சேனையில் இயங்கிவரும் உப மின் நிலையம் இப்பிரதேசத்தில் 48ஆயிரம் பொதுமக்கள் வாழ்கிறார்கள் 25ஆயிரம் மின்பாவனையாளர்கள் இருக்கிறார்.
இந்த நிலையில், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில்: ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, ஆலிம்நகர், அஷ்ரப்நகர், சம்புநகர், ஆலம்குழம் ,மீலாத் நகர், தீகவாபி போன்ற கிராமங்களும்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில்: பல்கலைக்கழம், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, கல்விக்கல்லூரி, கிழக்கிலங்கை அறபிக்கல்லூரி, சஹ்வா அறபிக்கல்லூரி, பெண்களுக்கான அறபிக்கல்லூரிகள்-2, தேசிய பாடசாலை, மகளிர் உயர்தரப் பாடசாலை, மாகாவித்தியாலயங்கள், வித்தியாலயங்கள் போன்ற கல்வி நிறுவனங்களும்.
மேலும் போட்யாட் சர்வதேச தொழிற்சாலை, சீரா சீமெந்துக் கலவைத் தொழிற்சாலை, தும்புத்திழிற்சாலை, கொந்தறாத்து நிருவனங்கள் என்று பல தொழிற்சாலைகளும்.
இருக்கும் அட்டாளைச்சேனை ஊரில் ஒரு மின்சாரநிலையமின்றி மக்கள் வெளியூருக்குச் செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.
இதனை ஊர்பற்றுள்ள யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் கேட்காமல் இருப்பதும், குரல் கொடுக்காமல் இருப்பதும் எந்த வகையிலும் நியாயம் இல்லை.
எனவே அன்றிருந்தவர்கள் செய்த தவறுகளை இனியும் சுட்டிக்காட்டி காலம் தாழ்த்த நேரமில்லை. உடனடியாக அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நன்மை கருதி அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு உப மின் நிலையத்தை நிரந்தர மின்சாரப் பாவனையாளர் சேவை நிலையமாக மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளை மக்கள் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கேட்டுக்கொள்கின்றார்.
