பொதுத் தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்திட்கான வேட்பாளர் விண்ணப்பம் கோரல்!

 ஹுதா உமர்-

நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமத்துவத்தை குறிக்கோளாக கொண்ட தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தனது நேரடி அரசியல் பிரவேசத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேற்கொள்ள இருக்கிறது. 

ஒட்டகம் சின்னத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது கட்சியின் சின்னமாக அறிவித்திருந்த தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்க உள்ளது.

இந்த கட்சியில் தேர்தலில் களமிறங்க விரும்பும் அம்பாறை மாவட்டத்தை வதிவிட மாவட்டமாக கொண்ட விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

சிந்தனை புரட்சியாளர்களையும், தாயக மண்ணில் சிறந்த பொருளாதாரத்துடன் கூடிய அபிவிருத்தியை விரும்புபவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. உங்களைப் பற்றிய தகவல் ,தகமை , எமது கட்சியில் இணைந்து தேர்தலில் கேட்பதுக்கான காரணம் மற்றும் நோக்கம் பற்றிய விபரம்களை ndphrinfo@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

உங்களுக்கான நேர்முக கலந்துரையாடலுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும். 

தகமை: அம்பாறை மாவட்ட பிரஜையாக இருக்க வேண்டும். 

தொடர்புகளுக்கு: செயலாளர் 
நிறைவேற்று அதிகார குழு 
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -